நெமிலி:சிறுமிக்கு 8-ம் வகுப்பு மாணவன் பாலியல் தொல்லை!
சிறுமிக்கு 8-ம் வகுப்பு மாணவன் பாலியல் தொல்லை!;

நெமிலி பகுதியில் உள்ள ஒரு கிராம பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை நேற்று காலை உணவு சாப்பிட 4-ம் வகுப்பு படிக்கும் தனது சகோதரனுடன் வந்துள்ளாள். அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அந்த சிறுமியிடம் நைசாக பேசி பள்ளி வளாகத்தில் உள்ள மாடி பகுதியில் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அங்கு வந்தவர்களை பார்த்து மாணவன் தப்பியோடியுள்ளான். இதுகுறித்து தகவலறிந்த பள்ளி ஆசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரி மற்றும் குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் நெமிலி காவல் நிலையத்தில் நேற்று இரவு 8 மணிக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதுதொடர்பாக காலை உணவு திட்டத்தை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் முறையாக கண்காணித்து குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.