ராசிபுரத்தில் ரோட்டரி சங்கத்தின் 8வது பதவியேற்பு விழா..

ராசிபுரத்தில் ரோட்டரி சங்கத்தின் 8வது பதவியேற்பு விழா..;

Update: 2025-07-10 15:22 GMT
ரோட்டரி கிளப் ஆப் இராசிபுரம் ராயல் சங்கத்தின் 8வது பதவியேற்பு விழா, NSR ரம்யவர்ஷினி திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 2025-26 ஆண்டிற்கான புதிய நிர்வாக குழுவின் பதவியேற்பு நிகழ்ச்சியில், பல Rotary பிரமுகர்களும் பொதுமக்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த விழாவில் Rtn. PHF. L. ஹரிஹரன் அவர்கள் புதிய தலைவராக, Rtn. PHF. K. கார்த்திக் செயலாளராக மற்றும் Rtn. PHF. R. சோமகண்ணன் பொருளாளராக பதவி ஏற்றனர். நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக DGN. Rtn. S. லோகநாதன் (DISTRICT GOVERNOR 2027-28, RID 2982) மற்றும் கௌரவ விருந்தினராக PDG. Rtn. T. சண்முகசுந்தரம் (Regional Co-Ordinator) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் மேலும் Rtn. MPHF. M. நந்தலால் (Assistant Governor - Zone 6) ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். விழாவின் ஆரம்பத்தில் முன்னாள் தலைவர் Rtn. PHF. M. பூபாலன் வரவேற்பு உரையையும், Rtn. PHF. R. ராமலிங்கம் செயலாளர் அறிக்கையையும் வாசித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புதிய உறுப்பினர்கள் அறிமுகம், செயல்திட்டங்கள் விளக்கம், பணியாளர்கள் அறிமுகம், பாராட்டுவிழா மற்றும் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. Project -1 மேலும் மாணவர்கள் இருவருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.13,000/- வழங்கப்பட்டது Project - 2 மேலும் இராசிபுரம் ராம் நகரில் அமைந்துள்ள "ரெயின்போ முதியோர் இல்லத்திற்கு " இரண்டு உணவு உண்ணும் மேஜை ( Dining Table Stainless-steel ) ₹ 8,000/- மதிப்பில் வழங்கப்பட்டது.. முடிவில் Rtn. PHF. K. கார்த்திக் நன்றி கூறியதுடன், சிறப்பான இரவு உணவுடன் விழா நிறைவு பெற்றது. இந்த நிகழ்வு, ரோட்டரி மதிப்பீடுகளையும் சமூக பங்களிப்பையும் உறுதிபடுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

Similar News