தேனீக்கள் கொட்டியதில் 8 பேர் படுகாயம், 6 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தேனீக்கள்;

Update: 2025-01-16 12:52 GMT
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலாபுரத்திலிருந்து அம்மச்சியாபுரம் செல்லும் சாலை ஓரம் நந்தீஸ்வரர் கோவில் அருகில் இருந்த மரத்தில் தேனீக்கள் கட்டிய கூட்டை மர்மநபர்கள் கலைத்து விட்ட நிலையில் தேனீக்கள் இன்று காலை முதலே அப்பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது அப்போது அப்பகுதி வழியாக நடந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்ற கோத்தலூத்து கிராமத்தை சேர்ந்த சரவணன்,மரிகுண்டு கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி ,நாதகுமார் சரத்குமார்,தேக்கம்பட்டியை சேர்ந்த சண்முகம்,முருகன் வாய்க்கால் பாறையைச் சேர்ந்த செல்வேந்திரன், எம். சுப்புலாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 8 பேர்களை தேனீக்கள் கூட்டம் கூட்டமாக தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டியது இதில் 2 நபர்கள் எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வாய், உதடு, தலை கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் தேனீக்களால் கொட்டப்பட்டு வீக்கம் அடைந்து படுகாயம் அடைந்த ஆறு நபர்கள் மயக்கமடைந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக 108ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து கானாவிலக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனீக்கள் கூட்டை கலைத்துவிட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவத்தால் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது

Similar News