கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.80 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் முன்பு பார்வையாளர் அமர்வு கூடம் அமைப்பதற்குஅமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.80 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் முன்பு பார்வையாளர் அமர்வு கூடம் அமைப்பதற்குஅமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

Update: 2024-12-26 01:51 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசின் 50 சதவிகித நிதியுடன் சிவகாசி லவ்லி ஆப்செட் மற்றும் அரசன் அலுமினியம் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி பங்களிப்புடன் ரூ.80 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் முன்பு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பார்வையாளர் அமர்வு கூடம் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ,சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ், ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அதன்படி, இந்த புதிய உள் விளையாட்டரங்குடன் கூடிய பார்வையாளர் அமர்வுக்கூடம் அரசின் 50 சதவிகித பங்களிப்பு ரூ.40 இலட்சம் நிதியுடன், சிவகாசி லவ்லி ஆப்செட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி ரூ.30 இலட்சம் மற்றும் சிவகாசி அரசன் அலுமினியம் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி ரூ.10 இலட்சம் என மொத்தம் ரூ.80 இலட்சம் மதிப்பில் சுமார் 8700 சதுரடி பரப்பளவில் சுமார் 750 பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டப்படவுள்ளது. இந்த புதிய கட்டடங்கள் மூலம் கல்லூரியில் பயிலும் சுமார் 2500 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்த அமர்வுகூடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியதற்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்கள் அவர்களுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும்,லவ்லி ஆப்செட் நிறுவனத்திற்கும்,சிவகாசி அரசன் அலுமினியம் நிறுவனத்திற்கும்,கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Similar News