ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் கொள்ளை போலீசார் விசாரணை

ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2025-02-17 08:24 GMT
அரியலூர், பிப்.17- ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் இவர் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல கடையைத் திறந்த கடை உரிமையாளர் ராஜன் கடையிலிருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் கடையில் உள்ளே சென்று பார்த்தபோது உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் இடத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் அலுவலக கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரொக்க பணம் என ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பணத்தை திருடிய நபர்கள் குறித்து அடையாளங்கள் சேகரிக்கும் வகையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் அடையாளங்களும் சேகரிக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Similar News