வேலூர் மாவட்டம் முழுவதும் 850 போலீசார் பாதுகாப்பு பணி!
வேலூர் மாவட்டம் முழுவதும் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.;
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி-க்கள் பாஸ்கரன், அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் மாவட்டம் முழுவதும் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில், பஸ் நிலையங்கள், மார்க்கெட், வணிக வளாகங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.