.ரூ 88. லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் முனுகப்பட்டு மற்றும் கடுகனூர் உள்ளிட்ட பகுதியில் எம்பி, எம்எல்ஏ நிதி உதவி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுது;

Update: 2025-06-22 19:15 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் முனுகப்பட்டு மற்றும் கடுகனூர் உள்ளிட்ட பகுதியில் எம்பி, எம்எல்ஏ நிதி உதவி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. குறிப்பாக முனுகப்பட்டு பகுதியில் ரூ‌.34.60 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறை கட்டிடம், கடுகனூர் பகுதியில் ரூ.31.45 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், ரூ10லட்சம் மதிப்பில் நிழற்கூடம், ரூ.7லட்சம் மதிப்பில் நாடக மேடை, ரூ.3லட்சம் மதிப்பில் உயர் கோபுர விளக்கு, ரூ.10லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் கலைஞர் படிப்பகம் உள்ளிட்ட சுமார் ரூ.88 லட்சம் மதிப்பில் பணிகள் முடிவுற்ற நிலையில் இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் செய்யாறு எம்எல்ஏ ஓ.ஜோதி முன்னிலையில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்எஸ்.தரணிவேந்தன் தலைமை தாங்கி கட்டிடங்கள், கலைஞர் படிப்பகம் மற்றும் உயர் கோபுர விளக்கினை திறந்து வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆரணி மத்திய ஒன்றியசெயலாளர் ராஜ்குமார், ஊராட்சி செயலர் செல்வகுமார், செய்யாறு ஒன்றிய செயலாளர் ஞானவேல், வெம்பாக்கம் கிழக்கு சங்கர், மத்திய ஒன்றியம் சீனிவாசன், அனக்காவூர் திராவிட முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்கள் கார்த்திகேயன், கப்பல் கங்காதரன், அறங்காவல் குழு முன்னாள் தலைவர் தமிழ்செல்வன், முன்னாள் ஊராட்சி செயலர் வேலு, பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, நகர செயலாளர் விஸ்வநாதன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News