வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் திருட்டு!.

எட்டையாபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்..

Update: 2024-08-01 08:58 GMT
எட்டையாபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகே உள்ள சோழபுரம் கிராமம், மேல தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி மணி விஜயா (36), இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீடு திரும்பியபோது அவரது வீட்டின் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த தங்கச் செயின், மூக்குத்தி, வளையல் என 9 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி திலிப் வழக்கு பதிவு செய்து, நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்..

Similar News