குளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி

பலி;

Update: 2025-03-18 03:48 GMT
குளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி
  • whatsapp icon
ரிஷிவந்தியம் அடுத்த முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சரத்குமார், 9; அதே பகுதி அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இவரும், அவரது நண்பரான குமார் மகன் தங்கராஜ், 9; என்பவரும் அருகில் உள்ள குளத்தில் குளித்துள்ளனர். ஆழமான பகுதிக்கு சென்ற சரத்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கினார். சரத்குமாரை மீட்டு ரிஷிவந்தியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக கூறினர். ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News