தக்கலை : 9 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண் உட்பட 5 பேர் கைது;

Update: 2025-05-20 11:14 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் தனிப்படையினர் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 9 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். இரணியல் கம்மன்குடித்தோப்பு பகுதியை சேர்ந்த தங்கப்பன் என்பவரின் மகன் பிரதீஸ் குமார்(31),திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஜிண்டோ என்பவரின் மனைவி பர்ஹத் லைலா(30), நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் மகன் ஷேக் சையது அலி பைசல்(30), இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அனிஷ் என்ற சிட்டா(23), வெள்ளிமலை சிவசெல்வன் என்பவரின் மகன் பிரகாஷ்(23)ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News