தொழிற்சங்க அமைப்புகளின் சார்பில் அரியலூரில் ஜூலை 9 புது வேலை நிறுத்தம் மறியல்.

தொழிற்சங்க அமைப்புகளின் சார்பில் அரியலூரில் ஜூலை 9 புது வேலை நிறுத்தம் மறியல் நடத்துவதென மாநில குழு உறுப்பினர் ஐடி நாகராஜன் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-07-01 03:47 GMT
அரியலூர் ஜூலை.1- தமிழக முழுவதும் நடைபெற உள்ள தொழிற்சங்க அமைப்புகளின் சார்பில் அரியலூரில் ஜூலை - 9ல் பொது வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில்  சிஐடி சார்பில் 500 பேர் கலந்து கொள்வது எனவும், ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கான  போராட்டத்தில் விச, விதொச . வாலிபர், மாதர், மாணவ அமைப்புகளின் சார்பில் 500 பேர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்திற்கான  கலந்தாலோசனைக் கூட்டம் அரியலூர் சிஐயு அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் ,மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் உள்ளிட்ட சிஐடியு, விச, விதொச . வாலிபர், மாதர், மாணவ அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பொது வேலை நிறுத்தம் மறியல் போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது குறித்து நிறைவாக பேசி மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் ஆலோசனை வழங்கி வழிகாட்டினார்.

Similar News