கரூர் மாவட்டத்தில் 95.10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 95.10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

Update: 2024-12-02 03:18 GMT
கரூர் மாவட்டத்தில் 95.10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று முழுமையாக கரையை கடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும், இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மலை தொடரும் இடம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் வானிலை காணப்பட்டது. மேலும், பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. பெய்த மழை நிலவரம் குறித்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூரில் 8.40 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 3.60 மில்லி மீட்டர், அனைப்பாளையத்தில் 12.20 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக க.பரமதியில் 18.00 மில்லி மீட்டர், குளித்தலையில் 6.60 மில்லி மீட்டர், தோகைமலையில் 8.60 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 8.30 மில்லி மீட்டர், மாயனூரில் 12.00 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 9.40 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 2.00 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 6.00 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 95.10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 7.93 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Similar News