சேலத்தில் 97.2 பாரன்ஹீட் வெப்பம்

பொதுமக்கள் அவதி;

Update: 2025-03-05 03:50 GMT
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக 97 டிகிரி பாரன் ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. தற்போது வறண்ட வானிலை காணப்படுகிறது. நேற்று முன்தினம் 97.8 டிகிரி பாரன் ஹீட்டாக வெப்பம் பதிவானது. நேற்று 97.2 டிகிரி பாரன் ஹீட்டாக வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரித்து வருவதால் மதிய நேரங்களில் முக்கிய கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது காணப்பட்டது. வெயிலின் தாக்கம் காரணமாக சேலத்தில் பழச்சாறு கடைகள், தர்பூசணி கடைகள், இளநீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Similar News