மாதனூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் BDO முறைகேடு செய்வதாக வார்டு உறுப்பினர் 8 பேர் பதவி ராஜினாமா செய்வதாக ஆட்சியரிடம் மனு

மாதனூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் BDO முறைகேடு செய்வதாக வார்டு உறுப்பினர் 8 பேர் பதவி ராஜினாமா செய்வதாக ஆட்சியரிடம் மனு;

Update: 2025-07-14 14:56 GMT
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மீதும். அரசு அதிகாரி மீதும் பல்வேறு குற்றச்சாட்டு முன் வைத்து 8 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய போவதாக ஆட்சியரிடம் மனு திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது, இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை குறித்து மனு அளித்தனர் இந்நிலையில் மாதனூர் ஒன்றியம் சின்ன பள்ளி குப்பம் பகுதி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன்.மற்றும் ஊரக வட்டார வளர்ச்சி அதிகாரி மீது குற்றசாட்டு முன் வைத்து,8 வார்டு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக ஆட்சியரிடம் கோரிக்கை அளித்தனர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஓவ்வெரு கிராம சபை கூட்டத்திற்கும் வருவதில்லை என்றும் அனைத்து உறுப்பினர்களும். "ஒவ்வொரு மாதமும் பஞ்சாயத்தில் என்னென்ன வேலைகள் நடந்ததோ. அந்தந்த வேலைக்கு எவ்வளவு தொகை எடுக்கப்பட்டது" என்ற செலவுக்கணக்கை தீர்மான நோட்டில் வெளிப்படையாக எழுதிக் காட்டுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு "அப்படியெல்லாம் செய்ய முடியாது" என்று கூறி என்னை கட்டுப்படுத்தும் அதிகாரம் உகளுக்கு இல்லை என்று சொல்கிறார். அதனால்தான் நாங்கள் கடந்த ஐந்து மாதங்களாக எந்த தீர்மானத்திலும் கையெழுத்து போடாமல் இருக்கிறோம். எங்கள் பிரச்சினைகளுக்காக மாதனூர் சென்று ஊராக வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து, எங்கள் குறைகளை கூறினோம் அதற்கு உங்கள் வார்டில் இருக்கிற குறைகளை தலைவரிடம் சொல்வதும், மன்ற கூட்டத்துக்கு தவறாமல் வந்து தீர்மானத்தில் கையெழுத்து போடுவதும் மட்டும்தான் உங்கள் வேலை. அதைத் தவிர உங்களுக்கு வேறு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தலைவருடன் அட்ஜஸ் பண்ணி போங்க என்று கூறி வருகின்றார். இதற்கு தீர்வு காணாவிட்டால் நாங்கள் 8 வார்டு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய போகிறோம் என்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து குற்றசாட்டு முன் வைத்தனர் பேட்டி.பிரியா வார்டு உறுப்பினர்

Similar News