கோவையில் கள்ளச் சாராயம் விற்பனைக்கு வைத்து இருந்த குற்றவாளி (Bootlegger) : பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் !
கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு பதுக்கி வைத்து இருந்த வழக்கில் தொடர்புடைய வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.;
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு பதுக்கி வைத்து இருந்த வழக்கில் தொடர்புடைய காரமடை பகுதியைச் சேர்ந்த வல்லரசு (23) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அந்த நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்கு பதுக்கி வைத்து இருந்த வழக்கு குற்றவாளியான வல்லரசு (23) என்பவரை குண்டர் (Bootlegger) தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.