கோவை டெக்ஸ்டைல் தொழிலதிபர் வீடில் ED சோதனை !

கோவையில் டெக்ஸ்டைல் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.;

Update: 2025-09-11 06:40 GMT
கோவை மாவட்டம், சூலூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் தொழில் அதிபர் ராமச்சந்திரன் வீட்டில், அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் நடத்திய 14 மணி நேர சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செலக்கரசல் பகுதியில் பழனி முருகன் டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ராமச்சந்திரன், தி.மு.க. பிரமுகர் ஆவார். இவர் தனது மகள் பெயரில் தனியார் வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், பல வருடங்களாக திருப்பிச் செலுத்தாமல் இருந்த நிலையில், திடீரென மொத்த கடனையும் ஒரே தவணையில் திருப்பிச் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது வங்கி ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அவர்கள் அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) பாதுகாப்புடன் பத்து பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை செட்டிப்பாளையம் சாலையில் உள்ள ராமச்சந்திரனின் வீடு, அவரது ஜவுளி நிறுவனம் மற்றும் அவரது உறவினரின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News