முதல்வர் ஸ்டாலின் உடல் நிலை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். EPS பேட்டி.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புதிய தொழில் முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா செல்லாமல் அவரது உடல் சிகிச்சைக்காக சென்றதாக மக்கள் கூறுகிறார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி எடப்பாடியில் பேட்டி அளித்தார் ... சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டி பகுதியில் புதியதாக துவங்கப்பட்ட அனுகிரஹா ஜவுளிக்கடையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் துவக்கி வைத்து சிறப்பித்தார். தொடர்ந்து சின்னமாரியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்ட எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது .. தொடர்ந்து எடப்பாடி அரசு பயணியர் மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது சென்னையில் நடைப்பெற்ற வான்வெளி சாகச நிகழ்விற்கு தமிழக அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததே விலை மதிக்க முடியாத உயிரிழப்பிற்கு காரணம் என்றும், விமான சாகச நிகழ்விற்கு அழைப்பு விடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்பதால் இதற்கு அவர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் செயல்பாடு இல்லாத அரசுதான் தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டுள்ளது என குற்றம் சாட்டி பேசினார் அப்போது எடப்பாடி நகர கழகச் செயலாளர் முருகன் முன்னாள் நகர மன்ற தலைவர் கதிரேசன் கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் மணி எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ் மற்றும் அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்