காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் வருகை

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டியின் பார்வையாளர் வந்தார்.;

Update: 2025-12-05 14:10 GMT
நாமக்கல் மேற்கு மாவட்டம் , அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டியின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வந்திருக்கும், பெல்லையா நாயக், நாமக்கல் மாவட்ட மேலிட பார்வையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நேரடியாக வட்டாரம் மற்றும் நகரங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக வட்டார நகர பிரதிநிதிகளை நேரில் சந்தித்து கலந்தாய்வு செய்தார். பூத் கமிட்டி அமைத்தல், எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து கண்காணிக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி குறித்து எடுத்து பிரச்சாரம் செய்து, மேலிடம் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். குமாரபாளையம் நகர தலைவர் ஜானகிராமன், நிர்வாகிகள் சிவராஜ், சுப்ரமணி, கோகுல்நாத், சிவராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News