தொகுதி-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 27.12.2024 முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது- என மாவட்ட ஆட்சியர் தகவல்

தொகுதி-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 27.12.2024 முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது- என மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தகவல்.

Update: 2024-12-26 01:43 GMT
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்வெளியிடப்பட்டுள்ள 2025 - ஆம் ஆண்டுக்கான வருடாந்திர திட்ட நிரலில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IV தேர்வு  13.07.2025  அன்று  நடைபெறவிருக்கிறது. இத்தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு தொகுதி-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 27.12.2024 முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெறவிருக்கிறது.  இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், இந்த பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள்  https://forms.gle/uVg85pHJbeCXqCqD6 என்ற  கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தினை 9360171161 என்ற தொலைபேசி எண் (அ) studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.     எனவே TNPSC குரூப்  4  தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News