சூளகிரி அருகே அரசு சாலையை திமுக ஒன்றிய செயலாளர் தோண்டியதாக கூறிய K.P.முனுசாமி தாக்கு:

வீடுகளே இல்லாத பகுதிக்கு அதிமுக ஆட்சியில் சாலை பணியை தொடங்கி, பினாமி பெயரில் சாலை வசதி என திமுக ஒன்றிய செயளாலர் பதிலடி

Update: 2024-07-25 14:12 GMT
சூளகிரி அருகே அரசு சாலையை திமுக ஒன்றிய செயலாளர் தோண்டியதாக கூறிய K.P.முனுசாமி தாக்கு: வீடுகளே இல்லாத பகுதிக்கு அதிமுக ஆட்சியில் சாலை பணியை தொடங்கி, பினாமி பெயரில் பார்ம் ஹவுஸ் நடத்துவதாக அவர் ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்த திமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி - பேரிகை சாலை முதல் சீக்கனப்பள்ளி கிராம நிலப்பகுதியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்கு ஜல்லி சாலை அமைக்கப்பட்டுள்ளது.. அதிமுக ஆட்சியில் 2019ல், இந்த சாலை அமைக்க பணி ஒப்பந்தமாகி 2023 ஜனவரி மாதத்தில் நிறைவடைந்துள்ளது.. இந்தநிலையில் திங்களன்று இந்த சாலையை ஜேசிபி கொண்டு திமுக சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ் அராஜகத்தில் ஈடுபடுவதாக நேற்று அதிமுகவின் துணை பொதுசெயலாளர் K.P.முனுசாமி பத்திரிகையாளர் சந்திப்பில், நாகேஷ் சம்பவ இடத்தில் இருந்ததற்கான புகைப்படத்தை காண்பித்து பேட்டியளித்திருந்தார்.. இந்தநிலையில் திமுக சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார், அதில்: சூளகிரி அருகே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வீடோ, விளைநிலமோ, மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதிக்கு அதிமுக ஆட்சியில் சாலை ஒப்பந்தமானது எதற்காக? சாலை அமைத்தது ஏன்? எங்கெல்லாம் அதிமுகவினர் உள்ளனரோ, பினாமிகள் உள்ளனரோ அங்கெல்லாம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலைமை சூளகிரி பகுதியில் பல நடந்துள்ளன சாலையை ரியல் எஸ்டெட்டு தொழிற்போட்டி காரணமாக நான் தோண்டினேன் என்கிறார்.. நான் ரியல் எஸ்டெட் இதுவரை செய்ததில்லை, பார்ம் ஹவுஸ் நிர்வாகத்திற்கும் பிறருக்கு இருந்த பணதகராறிலேயே சாலை தோண்டப்பட்டது.. எனக்கு வந்த தகவலிற்கு பிறகு தானே முன்நின்று சாலை குழியை மூட வைத்தேன் இதுதான் நடந்தது.. பார்ம் ஹவுசில், அதன் உரிமையாளருடன் K.P.முனுசாமி அமர்ந்து பேசும் புகைப்படத்தை அவர் ஸ்டைலியே புகைப்படத்தை ஆதாரமாக காண்பித்தார். கே.பி.முனுசாமியின் பினாமியாக தான் இந்த பார்ம் செயல்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த அவர், எம்பி, அமைச்சர், எம்எல்ஏ ஆகிய பதவிகளை வகித்துள்ள பெரியவர் கே.பி.முனுசாமி என்மேலே பொய்யாக பேட்டியளிக்கிறார்.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் மீது அதிகாரிகள், வருவாய்த்துறை உரிய நடவடிக்கை எடுக்கட்டும் பொய்யாக பேசி திரியும் அதிமுக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தான் இதனை செய்து வருவதாகவும் தன்னையும் திமுகவையும் பேச வேண்டியது ஏன் என கேள்வி எழுப்பினார்.. கேபி முனுசாமியும் திமுக ஒன்றிய செயளாரும் இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் தாக்கி பேசி கொள்ளும் இச்சம்பவம் அரசியல் வட்டரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News