வளர்ந்த நாடுகளின் பட்டியலில் நமது நாட்டை இடம்பெறச் செய்தது பிரதமர் நரேந்திர மோடியை சாரும் !-பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர்.K.P.இராமலிங்கம் பெருமிதம்!

நாமக்கல் இரயில் நிலையத்திற்கு பிற்பகல் 4.25 மணிக்கு வருகை தந்த வந்தே பாரத் இரயிலை பாஜக மற்றும் ரயில் பயணிகள்,பொதுமக்கள் சார்பில் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.பாஜக மாநில துணைத் தலைவர்Dr.கே.பி.இராமலிங்கம்,பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி,நாமக்கல் நகர பாஜக தலைவர் சரவணன் கொடி அசைத்து வரவேற்றனர்

Update: 2024-08-31 13:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மதுரை - பெங்களூர், மீரட் - லக்னோ இடையேயான 3 புதிய வந்தே பாரத் இரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார். இந்தக் காணொலி காட்சியினை நாமக்கல் இரயில் நிலையத்திலிருந்து அனைவரும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. புதியதாக இயக்கப்படும் 3 வந்தே பாரத் இரயில், சேவையை, பிரதமர் தொடங்கி வைத்ததை, நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து, பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், உள்ளிட்ட பலரும் பார்வையிட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. இராமலிங்கம்.. உலக நாடுகளில் உள்ள சிறப்பு வாய்ந்த திட்டங்கள் எல்லாம், நமது பாரத தேசத்திலும் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில், நாடு சுதந்திரம் அடைந்து 2014 வரை வளரும் நாடுகளில் பட்டியலில் இருந்தது. அப்படி இருந்த சூழலில் வளர்ந்த நாடுகளில் பட்டியல்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு 2014-ல் இருந்து முயற்சி எடுத்து, வளர்ந்த நாடுகள் பட்டியலில் வருவதற்கு, இரயில்வே துறை முக்கிய பங்கு வைக்கிறது. மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த ரயில்வே துறை வளர்ச்சியின் உச்சம்தான் வந்தே பாரத் ரயில் ஆகும். நமது நாட்டை வல்லரசாக முன்னேற்ற செயலாற்றி வரும் பிரதமர் மூன்று வந்தே பாரத் ரயில் சேவைகளை, தொடங்கி வைத்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் காட்டுகின்ற அக்கறைக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் ரயில்வே துறையினர் அனைவரும் பணியாற்றி வருகின்றனர். இந்த வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர்கள் அவர்கள் என்று கூறலாம். 48 மணி நேரத்தில் ரயில் பாதைகளை சீரமைத்து மீண்டும் ரயிலை இயக்கும் வகையில், ரயில்வே துறையை வளர்த்தெடுக்கக்கூடிய ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி உள்ளது. அதற்கு உறுதுணையாக ரயில்வே துறை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 1982 ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை, மாநில மதிப்பீட்டுக் குழு தலைவர் என்ற முறையில் சந்தித்தேன். அந்த ஆண்டு சேலம் கரூர் ரயில் பாதை வேண்டும் என அவரிடம் கோரிக்கை மனு அளித்தேன். 1996 நாடாளுமன்ற உறுப்பினராக திருச்செங்கோட்டில் இருந்தபோது, இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தபோது இந்த சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் பாதையில் வந்தே பாரத் ரயில் வருவது, பிரதமர், நான் உட்பட அனைவருக்கும் பெருமையாக உள்ளது. தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளர் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து நாமக்கல் இரயில் நிலையம் வழியாக அனைத்து ரயில்களும் நின்று செல்ல கோரிக்கை வைக்க உள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினரும் அதற்கான முயற்சியை மேற்கொள்வார்.தொலைதூர இரயில், வார இருமுறை இயக்கம், சிறப்பு ரயில் ஆகிய எந்த இரயிலாக இருந்தாலும் நாமக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஓராண்டு காலத்தில் அதனை நிறைவேற்றி தருவோம். இதற்கு ரயில்வே துறை அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் டாக்டர் கே.பி. இராமலிங்கம் கேட்டுக்கொண்டார்.தொடர்ந்து பேசிய நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், நாமக்கல் ரயில் நிலையத்தில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாகவும், சரக்கு ரயில்கள் வந்து சரக்குகளை இறக்கிச் செல்ல தேவையான தளம் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தருவதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில், தெற்கு இரயில்வே சேலம் கோட்ட முதன்மை திட்ட மேலாளர் (கதிசக்தி) கனகராஜூ, முதுநிலை கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், ரயில் பயணிகள், பொதுமக்கள் உள்படப்பாளரும் கலந்துகொண்டனர்.மதுரையிலிருந்து நண்பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, கரூர் வழியாக நாமக்கல் இரயில் நிலையத்திற்கு பிற்பகல் 4.25 மணிக்கு வருகை தந்த வந்தே பாரத் இரயிலை பாஜக மற்றும் ரயில் பயணிகள், பொதுமக்கள் சார்பில் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.பி.இராமலிங்கம்,பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி , நாமக்கல் நகர பாஜக தலைவர் சரவணன், ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்,பின்னர் அவர்கள் அதே வந்தே பாரத் ரயிலில் சேலம் சென்றனர். இரண்டு நிமிடம் நின்று செல்லும், இந்த இரயில், மதியம் 4: 30 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு, சேலம், ஜோலார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இரவு 9:30 மணியளவில் பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.

Similar News