தேசிய வேளாண் பூச்சிகள் வள அமைவகம் (NBAIR ) சார்பில், மரவள்ளி மாவு பூச்சி ஒட்டுண்ணியின் வயல்வெளி வெற்றி விழா எம்பிக்கள், அமைச்சர் பங்கேற்பு..

தேசிய வேளாண் பூச்சிகள் வள அமைவகம் (NBAIR ) சார்பில், மரவள்ளி மாவு பூச்சி ஒட்டுண்ணியின் வயல்வெளி வெற்றி விழா எம்பிக்கள், அமைச்சர் பங்கேற்பு..;

Update: 2025-11-13 13:47 GMT
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், மத்திய அரசின், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின்கீழ் (ICAR) இயங்கும், பெங்களூரு - தேசிய வேளாண் பூச்சிகள் வள அமைவகம் (NBAIR ) சார்பில், மரவள்ளி மாவு பூச்சி ஒட்டுண்ணியின் வயல்வெளி வெற்றி விழா நிகழ்ச்சி (Anagyrus lopezi Cassava Field Day) நடைபெற்றது.. முன்னதாக, விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மரவள்ளி கண்காட்சியை, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் V.S. மாதேஸ்வரன், K.R.N. இராஜேஷ்குமார் புதுதில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) (தாவரங்கள் மற்றும் உயிரி பாதுகாப்பு PP&B) கூடுதல் தலைமை இயக்குநர் Dr. Poonam Jasrotia,, பெங்களூரு தேசிய வேளாண் பூச்சிகள் வள அமைவகம் (NBAIR) இயக்குநர் Dr. S.N. Sushil,, மாவட்ட விவசாயிகள் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதலின் நிலைகள், நோய்த் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு மரவள்ளி கிழங்கு விளைச்சல், பயிர் பூஸ்டர்கள், உள்ளிட்டவை இடம்பெற்றன. இந்நிகழ்ச்சிக்கு, புதுதில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) (பயிர் மற்றும் உயிரி பாதுகாப்பு PP&B) உதவி தலைமை இயக்குநர் Dr. Poonam Jasrotia தலைமை வகித்தார். இந்தியாவில் மரவள்ளி பயிரில் மாவு பூச்சி கட்டுப்படுத்தப்பட்டது குறித்து, பெங்களூரு- தேசிய வேளாண் பூச்சிகள் வள அமைவகம் (NBAIR) விஞ்ஞானிகள் M. சம்பத்குமார், M. மோகன் ஆகியோர் வீடியோ படக்காட்சிகளுடன் விளக்கம் அளித்து பேசினர். அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தங்களின் அனுபவ கருத்துரைகளை (Feedback) வழங்கினர். மேலும், புது தில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) கூடுதல் தலைமை இயக்குநர் ADG (PP&B) Dr. Poonam Jasrotia பேசும்போது, மரவள்ளி பயிர் அதிகம் பயிரிடப்படும் தமிழ்நாடு புதுச்சேரி கேரளா ஆகிய பகுதிகளில் மாவு பூச்சி தாக்குதலை கண்டறிந்து வெளிநாட்டிலிருந்து நன்மை தரக்கூடிய ஒட்டுணியை வரவழைத்து, பெங்களூரு ஆய்வகத்தில் உற்பத்தி செய்து நாடு முழுவதும் இலவசமாக வேளாண் அறிவியல் நிலையங்கள், மாநில அறிவியல் துறைகளோடு இணைந்து வழங்கியதால் இன்று மாவு பூச்சி தாக்குதல் பெருமளவு குறைந்துள்ளது என்றார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய, நாமக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் V.S. மாதேஸ்வரன் கூறும்போது, நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிர் அதிகம் விளைச்சல் உள்ளதால் இப்பகுதியில் மரவள்ளி கிழங்கு ஆராய்ச்சி நிலையம் மற்றும் அரசு ஜவ்வரிசி ஆலை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து அதனை பெற்றுத் தருவேன் என்றார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P. சின்ராஜ், 2019-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் மரவள்ளியில் மாவு பூச்சி தாக்கத்தை கண்டறிந்து, அதனை உடனடியாக மத்திய அறிவியல் துறைக்கு தெரிவித்ததன் தொடர்ச்சியாக இன்று பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு மாவு பூச்சி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன் பேசும்போது, மாவு பூச்சி மரவள்ளிப் பயிரில் தாக்குதல் காணப்பட்ட உடனேயே நமது விவசாயிகள் அதனை, மத்திய மாநில அரசுகளுடன் தெரிவித்து அரசுகளுக்கு தெரிவித்து, ICAR, NBAIR , பெங்களூரு, தேசிய வேளாண் பூச்சிகள் வள அமைவகம் நிறுவனத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் மரவள்ளி பயிரிட்டுள்ள விவசாயிகள் போதுமான விளைச்சலை பெற்றுள்ளனர் எனக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார், மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதல் குறித்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் இப்பகுதி விவசாயிகளுக்கு இலவசமாக ஒட்டுண்ணிகளை வழங்கியதால் இன்று விவசாயிகள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர். வேளாண் துறையில் அதிக உற்பத்தியை பெறுவதற்கு இதுபோன்ற அறிவியல் / உயிரி தொழில்நுட்பங்கள் பெரிதும் கைகொடுக்கின்றன என்றார். தொடர்ந்து, பெங்களூரு தேசிய வேளாண் பூச்சிகள் வள அமைவகம் (NBAIR) இயக்குநர் Dr. S.N. Sushil,, பேசும்போது, நாமக்கல் மாவட்டத்தில் 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில், மரவள்ளியில் மாவுப் பூச்சியின் தாக்கத்தால் அதிக மகசூல் இழப்பு அதிகமாக காணப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம், பெங்களூருவில் உள்ள எங்களது அமைவகம், ஏத்தாப்பூர் மரவள்ளி ஆராய்ச்சி மையம் ஆகிய அரசு துறைகள் இணைந்து, இந்த மாவு பூச்சியைக் கட்டுப்படுத்த நன்மை தரக்கூடிய, அனாகயிரஸ் லூப்பசி( Anagyrus lopezi) ஒட்டுண்ணியை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தி, பெருமளவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு, மரவள்ளி மாவுப் பூச்சி முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது என கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக, பெங்களூரு, தேசிய வேளாண் பூச்சிகள் வள அமைவகம் (NBAIR ) முதன்மை விஞ்ஞானி Dr. K. சுபஹரன் நன்றி கூறினார். இந்த ஒரு நாள் வயல்வெளி விழாவில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், ஏத்தாப்பூர் மரவள்ளி ஆராய்ச்சி மையம் விஞ்ஞானிகள், தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்...

Similar News