தேனி மாவட்டம் பெரியகுளத்தில் R15 யமாஹா இருசக்கர வாகனத்தை குறி வைத்து திருடி செல்லும் இளைஞர்களின் CCTV காட்சி.
CCTV காட்சி;
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் ரபீக் ராஜா. இவர் பழைய இரும்பு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரின் பழைய இரும்பு கடையில் இரண்டு பைக்குகள் நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18.07.2025 அன்று இரவு ஒரு மணி அளவில் இரண்டு இளைஞர்கள் ரபிக் ராஜாவின் இரும்பு கடையில் நிறுத்தி வைத்த இரண்டு இரு சக்கர வாகனத்தில் R15 யமாஹ் என்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர். இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து ரபீக் ராஜா பெரியகுளம் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் கொடுத்துள்ள நிலையில் காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் R15 இரு சக்கர வாகனம் உள்ளிட்ட விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை தொடர்ந்து திருடு போகும் சம்பவம் அரங்கேறி வருவதால் காவல்துறையினர் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்பொழுது R15 இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர்கள் தள்ளிக் கொண்டே ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.