கோவை: TNPSC குரூப்-1 தேர்வு - 12997 பேர் எழுதுகின்றனர் !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-1 மற்றும் குரூப்-1A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது.;

Update: 2025-06-15 02:57 GMT
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-1 மற்றும் குரூப்-1A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 2,49,296 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் குரூப்-1க்கு 2,27,982 பேர், குரூப்-1Aக்கு 6,465 பேர் மற்றும் இரண்டுக்கும் இணைந்து 14,849 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு, தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் உள்ளிட்ட 44 இடங்களில் நடைபெறுகிறது. கண்காணிப்புக்காக 987 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 12,997 பேர் 48 தேர்வு மையங்களில் தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை (ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை உள்ளிட்டவை) கட்டாயமாக கொண்டு வர வேண்டும். செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவை வைத்திருந்தால் தேர்வில் அனுமதி மறுக்கப்படும் என்றும், விடைத்தாள் செல்லாது எனவும் டி.என்.பி.எஸ்.சி எச்சரித்துள்ளது.

Similar News