ரூ.10 லட்சம் கேட்டு அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டல்: அறக்கட்டளை நிறுவனர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு;

Update: 2025-02-21 04:07 GMT
சேலம் மல்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர் அறக்கட்டளை நடத்தி வருகிறார். நேற்று மாலை மனைவி மற்றும் உறவினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் மறைத்து எடுத்து வந்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர். இது குறித்து விநாயகமூர்த்தி கூறும் போது எங்கள் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் என்னிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். ஊர்மக்களை எனக்கு எதிராக தூண்டி விட்டு எனது நிலத்தை கோவிலுக்கு வேண்டும் என்று கூறி கலவரத்தை தூண்டி எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயற்சி செய்தேன் என்று கூறினார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News