10 ஆண்டுகளாக பணியாற்றியவருக்கு பாராட்டு
தாழையூத்து பள்ளிவாசல் இமாமுக்கு பாராட்டு;

நெல்லை மாநகர தாழையூத்து ஹவுசிங் போர்டு காலனியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ஜபருல்லாகான் என்பவர் 10 ஆண்டுகளாக இமாமாக பணியாற்றியுள்ளார். அவரின் சேவை மற்றும் நன்னடத்தை பாராட்டி இன்று (மார்ச் 31) எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி தலைவர் தாழை சேக் இஸ்மாயில் கேடயம் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின் பொழுது ஜமாத்தினர் உடன் இருந்தனர்.