10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல்லில் விபச்சார வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது;

Update: 2025-09-19 12:07 GMT
திண்டுக்கல் அருகே கடந்த 2015-ம் ஆண்டு விபச்சார வழக்கில் ஜெயபிரகாஷ் (எ) அருள்ஜெயபிரகாஷ் (42) என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷ் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியனை பிறப்பித்தது. இது தொடர்பாக புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஜெயபிரகாஷ் (எ) அருள்ஜெயபிரகாஷை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினார்.

Similar News