மேல மேட்டுப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

மேல மேட்டுப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-06-15 13:07 GMT

மேல மேட்டுப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது. ரூபாய் 11 ஆயிரத்து 700 பறிமுதல். கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜூன் 13ஆம் தேதி மாலை 6:45 மணி அளவில், சிந்தாமணிப்பட்டி அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது.

Advertisement

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலமேட்டு பட்டியைச் சேர்ந்த பெருமாள், சக்திவேல், திருச்சி மாவட்டம், பெரிய சௌராஷ்ட்ரா தெருவை சேர்ந்த சதீஷ்குமார், அரியமங்கலத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, பாலக்கரையைச் சேர்ந்த சூசைராஜ், கோபி, அமல்ராஜ், கார்த்திகேயன், தியாகராஜன், ஹரி கிருஷ்ணன் ஆகிய 10 பேரையும் கைது செய்தனர். மேலும், இவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.11,700ஐயும் பறிமுதல் செய்தனர். 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Tags:    

Similar News