கோயில் பிரசாதம் சாப்பிட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி !
திண்டுக்கல் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி;
By : King 24x7 Angel
Update: 2024-04-03 06:16 GMT
மருத்துவ மனை
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் நேற்று முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் உள்ளிட்ட நீர் ஆகாரங்கள், வெள்ளரிக்காய் மாங்காய் கலந்து தின்பண்டங்களையும் பொதுமக்களுக்கு அங்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய கிராமவாசிகள் பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருகிலுள்ள தாடிக்கொம்பு அரசு மருத்துவமனையில் வாந்தி மயக்கத்துடன் சிகிச்சைக்காக வந்த நிலையில், அங்கிருந்து சுமார் 10 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.