அடுத்தடுத்த வீடுகளில் 10 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டு

Update: 2023-12-03 08:26 GMT

போலீசார் விசாரணை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பலூர் பேரூராட்சியில் அந்தோணியார் காலனி பகுதியில் வசிப்பவர் அந்தோணிசாமி. இவரது மகன் அமுதாஸ் 42, இவர் பேரூராட்சியில் டிராக்டர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயா தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்லும் போது அருகே உள்ள ஜன்னலில் சாவி வைத்துவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். இதே போல் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு ஜன்னலில் சாவி வைத்து சென்றுள்ளனர், அதனைத் தொடர்ந்து மாலை வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் வாசல் கதவு திறந்துள்ளது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்து நெக்லஸ், தோடு, மோதிரம், செயின் என ஏழரைப் பவுன் நகை மற்றும் வெள்ளிக் கொடி ஒன்றும் திருடு போயிருந்ததும் தெரியவந்தது, ஜன்னலில் வைத்த சாவியை கண்காணித்த அடையாளம் தெரியாத நபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து பொருட்களை கொள்ளை அடித்தது சென்றது தெரியவந்தது.

Advertisement

மேலும், இதே போன்று அருகே உள்ள அமுதாஸின் தந்தை அந்தோணிசாமி வீட்டிற்குச் சென்ற திருடர்கள் வீட்டில் இருந்த தோடு, ஜிமிக்கி, மோதிரம் என இரண்டரை பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர் . பட்டப்பகலில் அப்பா, மற்றும் மகன் ஆகியோரது வீட்டில் 10 பவுன் நகை 50 ஆயிரம் பணம் வெள்ளி பொருள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அந்தோணிசாமி, அமுதாஸ் ஆகியோர். கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைவிரல் நிபுணர்கள் கொண்டு ஆய்வு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News