சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு 10ஆயிரம் ரூபாய் லஞ்சம்
சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.;
Update: 2024-05-18 03:51 GMT
சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாநகராட்சி 6ஆவது வார்டுக்கு உட்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பில் கலெக்டர் ஆறுமுகம் என்பவர் மதுரை கண்ணனேந்தல் விஜயலட்சுமிநகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியரான பரசுராமன் என்பவர் தனது மனைவி பெயரிலிருந்து மகன் பெயருக்கு சொத்துவரி மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்த நிலையில் 10ஆயிரம் ரூபாய் லஞ்ச பணம் வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். பில் கலெக்டருக்கு ஆறுமுகத்திற்கு லஞ்சம் பெற உதவியாக இருந்த அற்புதம் (எ) சுதாகர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து விசாரணை*