சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை !!
அரூரில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் சிபிசக்கரவர்த்தி,இவர் அரூர் பகுதியில் உள்ள டிபார்ட் மெண்ட் ஸ்டோரில் பணி புரிந்தார். அப்போது, அதே கடையில் பணி புரிந்த 17 வயது சிறுமியை, கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி, ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.
இது குறித்து சிறுமியின் தாயார் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், விசாரணை நடத்திய காவலர்கள் சிறுமியை தேடி கண்டுபிடித்தனர். பின்னர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாக, சிபிசக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு, தர்மபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இறுதி கட்ட விசாரணை இன்று முடிவடைந்த நிலையில், சிபிசக்கரவர்த்தி குற்றம் செய்தது உறுதியான நிலையில், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்ட னையும், 15ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.