விருதுநகர் அருகே குடும்பத்தகராறில் மனைவி தற்கொலை செய்த கொண்ட வழக்கில் 10 ஆண்டு சிறை
குடும்பத்தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-23 12:08 GMT
10 ஆண்டு சிறை
விருதுநகர் அருகே குடும்பத்தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் செல்வகுமார் 31. இவரது மனைவி சீதாலட்சுமி 21. இத் தம்பதியினர் விருதுநகர் ஏ.வி.டி.நகரில் வசித்து வந்த நிலையில் 2014ல் குடும்பத்தகராறில் சீதா லட்சுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் காவல் துறையினர் செல்வகுமார், மாமியார் ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இதில் செல்வகுமார், ராஜேஸ்வரிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.