100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்கல்

வழங்கல்;

Update: 2025-03-21 02:51 GMT
100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்கல்
  • whatsapp icon
கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்கள் சுய தொழில் துவங்க, கறவை மாடுகள் வழங்கப்பட்டன. கல்வராயன் மலையில் கள்ளச்சாராய தொழிலில், ஈடுபட்டு மனம் திருந்தி வாழும் நபர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் சுயதொழில் துவங்க, 100 சதவீத மானியத்தில், மது விலக்கு மற்றும் ஆயத் துறை, கால்நடை துறை சார்பில் உயர் ரக கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை, சேராப்பட்டு, தொரடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 30 பேருக்கு, ரூ.15 லட்சம் மதிப்பீட்டில், உயர் ரக கறவை மாடுகள் வழங்கப்பட்டன. கலெக்டர் பிரசாந்த் பயனாளிகளுக்கு மாடுகளை நேற்று வழங்கினார். இதில் கால்நடை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News