100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
காங்கேயம் பேருந்து நிலையத்தில் 100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்;
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், காங்கேயம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க ஒன்றிய தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார்.இதில் 100 நாள் வேலை அட்டை வைத்துள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். வேலை வழங்க முடியாவிட்டால் இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையாட்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.5ஆயிரம் நிதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.