இராசிபுரம் அரசு பள்ளியில் 100% தேர்ச்சி ! முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு !
Update: 2024-05-10 07:28 GMT
மாணவ மாணவிக்கு பாராட்டு
இந்த வருடத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் இராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு இப்பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் பயின்ற வைஷ்ணவி என்ற மாணவி 484 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மாணவர் மகேந்திரன் 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் மாணவி காவ்யா 466 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இம் மாணாக்கர்களுக்கு பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் திருமதி.எம்.பி.கவிதா அவர்களும் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இனிப்பு வழங்கி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.