100 சதவீதம் வாக்குப்பதிவு செலுத்தி சாதனை படைக்க வேண்டும்
தெற்கு சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்கு பதிவாகி சாதனை படைக்க வேண்டும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் கூறினார்.
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் தொகுதி முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து சேலம் தாதகாப்பட்டி கேட் அருகில் களஞ்சியம் கலை குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதற்கு மாநகராட்சி செயற்பொறியாளரும், தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு குழுவினருமான பழனிசாமி முன்னிலை வகித்தார். சேலம் மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பாலச்சந்தர் தலைமை தாங்கி நாட்டுப்புற கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.