100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு பைக் பேரணி !
கீழ்வேளூரில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற்றது. ;
By : King 24x7 Angel
Update: 2024-03-27 05:10 GMT
விழிப்புணர்வு பைக் பேரணி
கீழ்வேளூரில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு பைக் பேரணி நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம்தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகிறது. கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து மாவட்ட எல்லையான கானூர் சோதனை சாவடி வரையில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரேணுகா தேவி தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் ரமேஷ், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதாஸ், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சந்திரகலா , வருவாய் ஆய்வாளர்கள் கார்த்தி, சசிகலா, சக்தி மனோகர், கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். .