100% வாக்குப்பதிவு - வருவாய்த்துறையினர் மனித சங்கிலி விழிப்புணர்வு

நாச்சியார் கோயிலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வருவாய்த் துறை சார்பில் நடந்த மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணியில் அங்கன்வாடி ஊழியர்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Update: 2024-03-28 08:27 GMT

தமிழகத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதை ஒட்டி வாக்காளர்கள் மத்தியில் 100% வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாச்சியார்கோவில் முருக்கங்குடி சரக வருவாய்த்துறையினர், காவல்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் நாச்சியார்கோவில் கடைவீதியில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வு ஏற்படுத்தினர்

மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மாவட்ட துணை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வட்ட வழங்கள் அலுவலருமான கமலக்கண்ணன் திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்கியராஜ் நாச்சியார் கோவில் காவல் ஆய்வாளர் சுகுணா மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

   நிகழ்வில் மாவட்ட துணை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் வெத்தலை பாக்கு பழங்கள் உள்ளிட்ட தட்டுகளுடன் வாக்காளரிடம் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி வாக்களிப்பது பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் விழிப்புணர்வு நிகழ்வுகளை நாச்சியார்கோவில் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் மற்றும் வருவாய் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News