102 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்
மன்னார்குடி தனியார் வேலை வாய்ப்பு முகாமில் நூற்று இரண்டு பேருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பணி ஆணை வழங்கினார்;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு ஊரக நகர் புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் தொழில் துறை,சேவை துறை, விற்பனை துறைகள் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 101 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன முகாமில் பங்கேற்ற தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தேர்வு செய்யப்பட்ட 102 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திருச்சி மண்டல இணை இயக்குனர் அருணகிரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.