108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் அவர்கள் பாராட்டி பரிசளித்து கௌரவித்தார்.

Update: 2024-06-21 16:27 GMT

பாராட்டு 

நாமக்கல் மாவட்டத்தில் இருபத்தி ஏழு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 19 ஆம்புலன்ஸ் பேசிக் லைப் சப்போர்ட் , 6 ஆம்புலன்ஸ் அட்வான்டேஜ் லைப் சப்போர்ட் , 2 ஆம்புலன்ஸ் பச்சிளம் குழந்தைக்கு என மொத்தம் இருபத்தி ஏழு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இரவு பகல் என ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் விபத்து, நெஞ்சு வலி, வலிப்பு, விஷ முறிவு, மற்றும் பல்வேறு விதமான நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.

குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குள்ளேயே பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இவ்வாறு முதலுதவி சிகிச்சை அளித்து சிறப்பாக செயல்பட்ட ராமலிங்கம், விஜயகுமார், ஓட்டுநர்கள் கார்த்திக், ரேணுகோபால், ஆகியோரை பாராட்டி மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் அவர்கள் பாராட்டி பரிசளித்து கௌரவித்தார்.இந்த நிகழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் சேலம் மண்டல மேலாளர் அறிவுக்கரசு, நாமக்கல் மாவட்ட மேலாளர் சின்னமணி, நாமக்கல் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News