நாமக்கல்:108 ஆம்புலன்ஸ் பணிக்கு நேர்முகத் தேர்வு
இந்த நேர்காணலை சேலம் மண்டல மேலாளர் அறிவுகரசு நடத்தினார். இதில் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமை மற்றும் உதவியாளர்களின் பிளஸ் டூ சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கான நேர்காணல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் -1) காலையில் இருந்து நடைபெற்று வருகிறது.. இந்த நேர்காணல் மதியம் இரண்டு மணி வரை நடைபெறும். இந்த நேர்காணலை சேலம் மண்டல மேலாளர் அறிவுகரசு நடத்தினார். இதில் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமை மற்றும் உதவியாளர்களின் பிளஸ் டூ சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இந்த நேர்காணலில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.