சீதாராம ஆஞ்சநேயர் கோயிலில் 108 அகல் விளக்கு பூஜை

குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் உள்ள மிக பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோயிலில் 108 அகல் விளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2024-01-23 06:17 GMT

பஜனை 

 ராமஜென்ம பூமி குழந்தை ராமர் கோயில் பிரதிஷ்டை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப் பேட்டை பகுதியில் அமைந்து உள்ள மிக பழமை வாய்ந்த அருள்மிகு சீதாராம ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தன பஜனை விழா கோயில் வளாகத்தில் நடைபெற்றது . முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது பின்னர் குழந்தை ராமர் வேடம் அணிந்து சிறர் அமர வைத்து சிறப்பு சங்கீர்த்தன பஜனை மற்றும் 108 அகல் விளக்கு பூஜைகள் நடைபெற்றது . இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News