இன்றுடன் நிறைவடைந்தது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைவதாக மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-04-08 10:42 GMT

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைவதாக மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைவதாக மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 10ஆப் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26-இல் தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 103 தேர்வு மையங்களில், 278 பள்ளிகளைச் சேர்ந்த 8,824 மாணவர்கள், 9,161 மாணவிகள், தனித்தேர்வர்கள் 187 உட்பட மொத்தம் 18,172 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 8619 மாணவர்கள், 9,081மாணவிகள், தனித்தேர்வர்கள் 120 உள்பட 17,867 பேர் தேர்வை எழுதினர். இந்த தேர்வுக் கண்காணிப்புப் பணியில் இணை இயக்குநர் தலைமையில், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள். 103 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படைகுழுவினர் ஈடுபடுத்தப் பட்டனர். பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் சமூக அறிவியல் பாடத் தேர்வுடன் இன்று நிறைவடைகிறது எனத் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News