11 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டிடம்

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் அடிக்கல் நாட்டி, உடனடியாக பணியினை துவக்கிவைத்தார்.;

Update: 2025-02-26 12:51 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் டாக்டர் கருணாநிதி அவர்களின் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ11 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டிடத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் அடிக்கல் நாட்டி, உடனடியாக பணியினை துவக்கிவைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தர்ராஜ் கிளைக் கழக செயலாளர்கள் துரைமாணிக்கம், சி.பி.ராஜேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகம் கொளக்காநத்தம் கூட்டுறவு சொசைட்டி செயலாளர் வெங்கடேசன், கிராம ஊராட்சி அலுவலர் பிரபு, கிராம அலுவலர்கள் முருகானந்தம்,கமல் உள்ளிட்ட ராஜேந்திரன், மருதமுத்து,சக்திவேல், சதீஷ்,அருண்,சுந்தரம், உள்ளிட்ட கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் துப்புரவு பணியாளர்கள் கிராம ஊராட்சி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News