சங்ககிரி தொகுதியில் 1,173 பேர் தபால் வாக்கு
சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் 1,173 பேர் தபால் வாக்கு செலுத்தினர்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் 85 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 1,173 பேர் தங்களது இல்லத்திலிருந்தபடியே வாக்குகளை செலுத்தினர். சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் 311 வாக்குச்சாவடி மையத்துக்கு உள்பட்ட 85 வயதைக் கடந்த 1,223 பேரில், விடுபட்டவர்களில் 85 வயதைக் கடந்தவர்களில் 27 பேரும், மாற்றுத் திறனாளிகளில் 5 பேரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
மாற்றுத் திறனாளிகளில் 212 பேர், 85 வயதைக் கடந்தவர்களில் 350 பேர், மாற்றுத்திறனாளிகள் 169 பேர் என மூன்று தினங்களில் மொத்தம் 1,173 பேர் வாக்குகளை செலுத்தியுள்ளனர். சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் நடைபெற்ற முதியோர் வாக்குப் பதிவு செய்வதை நாமக்கல் மக்களவைத் தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமான லோகநாயகி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.