சேலத்தில் 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சேலத்தில் 11ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-06-17 16:45 GMT
கோப்பு படம்

சேலம் கிச்சிப்பாளையம் சின்ன மாரியம்மன் கோயில் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி புனிதவதி (46). இவர்களது மகன் சபரிவாசன் (16), இவர் கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். சபரிவாசன் அடிக்கடி செல்போன் பார்த்துக்கொண்டு இருப்பாராம்.

நேற்று நீண்ட நேரம் செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சபரீவாசன் பேனில் தூக்கு போட்டுள்ளார். அவரை அங்குள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News