12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

போராட்டம்;

Update: 2025-04-21 16:53 GMT
தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் அங்கமான தஞ்சை மாநகர தூய்மை பயணிகள் சங்கம் சார்பில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதற்கு மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்களுக்கு அரசாணை எண் 62-ன்படி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.760, ஓட்டுநர்களுக்கு ரூ.798 ஊதியம் வழங்க வேண்டும் . தூய்மை பணியாளர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறினால் மட்டுமே வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இந்தப் போராட்டத்தால் மாநகராட்சி வார்டுகளில் குப்பைகள் அள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Similar News