12 வருடங்களுக்கு பிறகு திருவிழா ஆரம்பம்

ஸ்ரீபெத்தநாச்சியம்மன் உடனுறை ஸ்ரீ பொன்னம்பல ஏமாபுரீஸ்வரர் கோவில் கும்பிபாபிஷேக விழா தொடக்கமாக பந்தல்கால் நடும் நிகழ்வு;

Update: 2025-08-20 19:05 GMT
பெரம்பலூர் ஸ்ரீபெத்தநாச்சியம்மன் உடனுறை ஸ்ரீ பொன்னம்பல ஏமாபுரீஸ்வரர் கோவில் கும்பிபாபிஷேக விழா தொடக்கமாக பந்தல்கால் நடும் நிகழ்வு நடைப்பெற்றது. கிராம காரியஸ்தாரர்கள், கோவில் நிர்வாகிகள், பூசாரிகள் மற்றும் முக்கிய பிரமுகவர்கள் காப்பு கட்டினர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக சாலை அபிராமபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபெத்தநாச்சியம்மன் உடனுறை ஸ்ரீ பொன்னம்பல ஏமாபுரீஸ்வரர் சுவாமி , ஸ்ரீ கல்லணையான் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா அடுத்த மாதம் செப்டம்பர் 4-ந்தேதி அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.கும்பாபிஷேகத்திற்கு 7 புனித நதிகளில் புனிதநீர் எடுக்க 7 பேர் கொண்ட குழு சென்று வந்தனர். இந்நிலையில் விழாவின் தொடக்கமாக பந்தல்கால் நடும் நிகழ்வு நேற்று நடைப்பெற்றது. மஞ்சள் பூசி, சந்தனம் தடவி, மலர்களால் அலங்கரித்த மரக்கால், கிராம மக்கள் முன்னிலையில் புனித மண்ணில் நட்டு வைத்தார்கள். கோவில் நிர்வாகத்தினர்கள் தலைமை அர்ச்சகர் அல்லது முக்கிய பிரமுகர்களால் நடப்பட்டது. இந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி, கோயிலுக்கு மட்டுமல்லாது, கிராமத்திற்கே ஒரு மங்களகரமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, காப்புக்கட்டும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இதில் கிராம முக்கியஸ்தர்கள், பூசாரிகள், முக்கியநபர்கள் காப்பு கட்டினார்கள். அதனைத்தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது, கிராம காரியஸ்தர்கள் கண்ணபிரான், சரவணன், கிராம முக்கியஸ்தர்கள் ரமேஷ், சக்திவேல், தங்கராசு, கணேசன், தமிழ்ச்செல்வன், செந்தில்குமார், செல்வகுமார், சிவக்குமார், இளையராஜா, பால்ராஜ், மகேஷ்குமார், பாண்டியன், ரவிச்சந்திரன், செல்லம், ராஜ், ரமேஷ், கணேஷ் பாபு , பூசாரி வேலு, விஜய், அஜய், மகிழன், ராகுல், கண்ணுசாமி, ஹரி, தீபன், வடிவேல், பிச்சை பூசாரி, தாண்டாயி, திருமலை, தமிழரசி, கீதா கங்கா, கவிதா, மாலா, விஜயலட்சுமி, முத்துச்செல்வி, ரஞ்சிதா, கௌசல்யா, மஞ்சுளா, லதா, புனிதா, கலைச்செல்வி உள்ளிட்ட கல்லனையான் குடிமக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News