சங்கரன்கோவிலில் 12 மணி நேர ஆதார் சேவை துவக்கம்

தென்காசி மாவட்டத்தில் 12 மணி நேர ஆதார் சேவை துவங்கப்பட்டது.

Update: 2024-01-19 05:33 GMT
சங்கரன்கோவிலில் 12 மணி நேர ஆதார் சேவை துவக்கம்
தென்காசி மாவட்டம் ,  சங்கரன்கோவில் உள்ளிட்ட தலைமை அஞ்சலகங்களில் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் பயனடையும் வகையில், காலை 8 முதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தை மாதத்தில் "ஆதார் திருவிழா" என்ற பெயரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை அஞ்சலகங்களில் மாலை 4 மணி வரை இந்த சேவை விரிவுபடுத்த பட்டுள்ளது என்று கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி இப்போது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News